2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

மதங்களுக்கிடையில் மோதலை ஏற்படுத்த முனைகின்றார்கள்

Niroshini   / 2016 மார்ச் 29 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

'நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை மறைக்கும் வகையில் நாகதீப விகாரைக்கு முன்பாக புத்தர் சிலை அமைக்கப்படவுள்ளதாக செய்திகளை வெளியிட்டு, மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்துவதற்கு சிலர் முனைகின்றனர்' என நாகதீப விகாராதிபதி நவதகல பதுமகித்தி தேரர் தெரிவித்தார்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

'நயினாதீவில் சிலை அமைப்பது தொடர்பில் வடக்கு மற்றும் தென்னிலங்கை ஊடகங்கள் பிழையாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. வடக்கு மக்களின் எதிர்ப்பையடுத்து, புத்தரின் சிலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை மறைக்கும் வகையில் நாகதீப விகாரைக்கு முன்பாக புத்தர் சிலை அமைக்கப்படுகின்றன என வடக்கு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

உண்மையில் இந்த சிலை அமைப்பதற்கு நயினாதீவு மக்கள், மீனவர்கள் அமைப்புக்கள் என்பன ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், அனைத்து அனுமதிகளும் பெற்றுதான் சிலை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். ,ருப்பினும், கடல் வள அமைச்சின் அனுமதியைப் பெறவில்லை. அதனால் தான் தற்காலிகமாக சிலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தை மறைக்கு வகையில் சிலை அமைக்கப்படவில்லை. அச்செய்தி உண்மைக்கு புறம்பானது. மதங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தும் நோக்கில் அந்தச் செய்தி உள்ளது' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X