2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

முதலமைச்சரின் பிறந்தநாளன்று இறுதி அமர்வு

Editorial   / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ். நிதர்ஷன்

வட மாகாணசபையின் ஆயட்காலம் அடுத்த மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் பிறந்த நாளான அடுத்த மாதம் 23ஆம் திகதி அன்று வட மாகாண சபையின் இறுதி அமர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ள அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், இறுதி அமர்வுடன் மாகாண சபை நிறைவுக்குள் இன்னமும் இரண்டு அமர்வுகள் உள்ளதாகவும் கூறினார்.

வட மாகாணசபையின் 131ஆவது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே சீ.வி.கே. சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“வட மாகாண சபையின் ஆயுட்காலம் அல்லது ஆட்சிக்காலம் அக்டோபர் மாதம் 25ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. இன்னும் மீதமாக இரண்டு அமர்வுகள் இருக்கின்றன. இதற்கமைய இறுதி அமர்வு 23ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்டிருக்கின்றது. அன்றைய தினம் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் பிறந்த நாளாகும். எனவே அதனை அறிந்து 23ஆம் திகதி இறுதி அமர்வை ஒழுங்கமைத்துள்ளோம்.

மேலும் இறுதி அமர்வில் பிரேரணைகள் எவையும் இருக்காது. அது கண்ணதாசனின் பாடலுக்கமைய மகிழ்ச்சியாக நாங்கள் அனைவரும் கலைந்து செல்வதற்கான அமர்வாக இருக்கும். இறுதி அமர்வுக்கு முன் அமர்வு இம்மாதம் 27ஆம் திகதி நடைபெறும்” எனக் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X