Editorial / 2018 செப்டெம்பர் 09 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில், மீன்பிடித் தொழிலை, சர்வதேசத் தரத்துக்கு முன்னேற்ற வேண்டியது அவசியமாகுமென, யாழ்ப்பாண இந்திய உயர்ஸ்தானிகராலயத் துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசத்தில், நேற்று (08) 300 மீனவக் குடும்பங்களுக்கு, இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில், படகுகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில், கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இந்திய அரசாங்கமானது, வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அபிவிருத்தியை நோக்கி நகர்த்தவும், பல்வேறு உதவித் திட்டங்களை கட்டம் கட்டமாக வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
அதன் முதற்கட்டமாக, மன்னார் மாவட்டத்தில், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 70.96 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில், மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணம் – குருநகரில், 152 மில்லியன் இலங்கை ரூபாய் செலவில், மீன்பிடி வலைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளதாவும் கூறினார்.
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில், மீன்பிடித் தொழிலை சர்வதேச தரத்துக்கு முன்னேற்ற வேண்டியது அவசியமாகுமென, அவர் மேலும் கூறினார்
5 hours ago
8 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
24 Oct 2025