Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Sudharshini / 2016 ஜூலை 13 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் மனைவிக்கு தீ மூட்டி தானும் தீ முட்டிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சௌந்தராஜா உதயராஜா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார். மனைவி தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இவர்கள் இருவரும், 3 மாதங்களுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து வாழ்ந்து நிலையில் சில நாட்களாக இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த நபரின் மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
அங்கும் சென்று முரண்பட்ட கணவன், மனைவியை மாமரத்தில் தூக்கு போடுவதற்கு முயற்சி செய்துள்ளார். அது பயனளிக்காமல் போக, கடந்த 7ஆம் திகதி மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிவிட்டு, தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், தீக்காயங்களுக்குள்ளான கணவனையும் மனைவியும் முதலில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இந்நிலையில் கணவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், மனைவி தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago