2021 மே 06, வியாழக்கிழமை

மலசலகூடக் குழியில் ஆயுதங்கள் மீட்பு

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உடுப்பிட்டிச் சந்தியிலுள்ள வீடொன்றின் பழைய மலசலகூடக் குழியை துப்பரவு செய்யும் போது அதற்குள் இருந்து பெருமளவான ஆயுதங்கள், ஞாயிற்றுக்கிழமை (04) மீட்கப்பட்டதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

4 கிளைமோர் குண்டுகள், 17 கைக்குண்டுகள், 3,500 துப்பாக்கி ரவைகள் என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டன.

இந்தப் பகுதியில் முன்னர் இராணுவ முகாம் இருந்ததாகவும் இராணுவ முகாம் அகற்றப்பட்ட பின்னர், மீள்குடியேறிய காணி உரிமையாளர், மலசலகூடத்தை துப்பரவு செய்யும் போது ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட ஆயுதங்கள், வல்வைவெளியில் வைத்து விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .