2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

முகவர் அரசியலை நிறுத்த வேண்டும்: சி.வி.கே

Menaka Mookandi   / 2016 மார்ச் 24 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

தென்னிலங்கையிலுள்ள இரண்டு கட்சிகளும் வடக்கில் முகவர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் அமைக்கும் வீட்டுத்திட்டத்தை வடமாகாண சபையின் அனுமதியில்லாமல், தென்னிலங்கையின் பிரதான கட்சிகளின் முகவர் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் வடமாகாண சபையில் வியாழக்கிழமை (24) விவாதம் நடைபெற்ற போதே சி.வி.கே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் முகவர் அரசியலை செய்தார்கள். அதன் மூலம் பல அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார்கள். அதேபோல் நல்லாட்சியிலும் நடக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X