Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2016 மார்ச் 24 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
மீண்டும் ஆயுதப் போராட்டம் வெடிக்காதிருக்க நல்லாட்ச்சி அரசாங்கம் முன்வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு மாதிரிக்கிராம மக்கள், தம்மை தமது சொந்த இடத்தில் குடியமர்த்துமாறு கோரி இன்று உண்ணாவிரதப்போராட்டமொன்றை மேற்கொண்டனர். இங்கு கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இந்த கேப்பாபிலவு மக்கள் தமது பூர்விக நிலத்தை விடுவிக்குமாறு கோரி ஒரு அமைதியான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். எமது மக்கள் இடம்பெற்ற யுத்தத்திலே பாரிய இழப்புக்களை சந்தித்து இடம்பெயர்ந்து மீள்குடியேறி கடந்த ஏழு வருடங்களாக இன்றும் ஆகாரமின்றி நீரின்றி தமது உரிமைகளை, அடிப்படைவசதிகளை கோரி இவர்கள் போராடுவது மிகவும் வேதனைக்குரியது.
நல்லாட்சி அரசாங்கம் உருவாகி ஒரு வருடம் கடந்தும் மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாமை மிகவும் வேதனைக்குரியது.
இவர்களது பூர்விக நிலங்களை கையகப்படுத்தி வைத்திருப்பது மட்டமல்ல மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பங்கமேற்ப்படுத்தும் பல்வேறு செயற்ப்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தவகையில் இம்மக்களுடைய காணிகளை இராணுவம் வைத்திருக்கிறது.
முறிகண்டி குளத்தை 59 ஆவது படைப்பிரிவு கையகப்படுத்தி வைத்திருக்கிறது கடல் வளத்தை தென்பகுதி சி்ங்கள மீனவர்கள் சுரண்டிச்செல்கின்றனர்.
இவ்வாறு எமது மக்களின் வாழ்வாதரரத்தை பாதிக்கும் பல்வேறு செயற்பாட்டை பல்வேறு தரப்பினரும் மேற்கொண்டுவருகின்றனர். காடளிப்பு இடம்பெறுகிறது. ஆகவே, இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நான் மிகவும் பணிவாக வேண்டுவது, எமது மக்களது அடிப்படைத்தேவைகளை அடிப்படைப்பிரச்சினையை இனம் கண்டு அவர்களது செந்த நிலங்களை அவர்களிடம் கையளித்து எமது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழிசமைத்து கொடுக்க வேண்டும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
05 Jul 2025
05 Jul 2025