Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூலை 12 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் சுற்றுவட்டாரத்திலுள்ள மின்கம்பத்துடன் வான் மோதியதில் திங்கட்கிழமை (11) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பலியாகியதுடன், மேலும் 5 பேர் படுகாயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த சிறிதரன் சிவமலர் (வயது 49) என்ற பெண் உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வருகை தந்த ஒருவர், தனது உறவினர்களுடன் நயினாதீவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய போது, அவர்கள் பயணித்த வானின் சாரதி நித்திரை கொண்டமையால் வான் நிலை தடுமாறி மின்கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .