2021 ஜனவரி 20, புதன்கிழமை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்வுகள் நடத்த தடை

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன், செல்வநாயகம் ரவிசாந்

யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் எந்தவிதமான நிகழ்வுகளையும், நடத்த கூடாது என, மாணவர்களுக்கு பல்கலைக்கிக நிர்வாகம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.

இதற்கமைய,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில், இன்றைய தினமும் நாளைய தினமும், எந்த நிகழ்வுகளையும் நடத்தகூடாது என, மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு நிர்வாகம் இன்றைய தினம் கண்டிப்பான உத்தரவை வழங்கியுள்ளது.

பல்கலை வளாகத்தினுள், இன்றைய தினம் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 65ஆவது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நாளைய தினம் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அஞ்சலி நிகழ்வுகள் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையிலையே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .