2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தையொட்டி, யாழ்ப்பாணம் மாநகர எல்லையில், நாளை (11) முதல் மார்ச் 17ஆம் திகதி வரை, டெங்கு ஒழிப்பு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய, நாளை (11), யாழ்ப்பாணம் நகரின் ஜே - 73, 74, 76 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் நாளை மறுதினம் (12), குருநகரின் ஜே - 67, 68, 70 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் வௌ்ளிக்கிழமை (13), சகல பாடசாலைகளிலும் டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன், 14ஆம் திகதி, நாவாந்துறையின் ஜே - 87, 88, 85 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும் 17ஆம் திகதி, வண்ணார்பண்ணையின் ஜே- 100, 102, 104 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளிலும், டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .