2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

யாழில் வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைப்பு

Editorial   / 2020 ஜனவரி 17 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழில் உள்ள சமுர்த்தி வங்கி முகாமையாளரின் காருக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

யாழ். கல்வியங்காட்டு பகுதியில் அமைந்துள்ள குறித்த வங்கி முகாமையாளரின் வீட்டுக்குள் நேற்று (16) இரவு நுழைந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளவினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர். 

தீ முழுமையாக பரவாததால் , கார் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன், சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--