2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்னால் ’எச்சரிக்கை’ துண்டுப் பிரசுரங்கள்

Editorial   / 2020 மார்ச் 10 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் உள்ள மதில் ஒன்றில், இன்று (10), “எச்சரிக்கை” என தலைப்பிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த துண்டு பிரசுரத்தில், வடக்கு - கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில், உடனடியாக சகலவிதமான சமுதாய சீர்கேடுகளும் நிறுத்தப்பட வேண்டுமெனவும் இளைஞர்கள் மீது பெற்றோர் கூடுதலான கவனம் செலுத்துதல் வேண்டுமெனவும் இல்லையேல் எவராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இங்கு வாய் பேச்சுக்கு இனி எதுவும் இல்லை, ஆனால் செயலில் செய்வதற்கு நிறைய உண்டு, இனிவரும் காலங்களில் சகலவிதமான சீர்கேடுகள் மற்றும் குற்றங்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும் உள்ளிட்ட பல விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தத் துண்டுப் பிரசுரம், தமிழ் இளைஞர் படையணி மண்ணின் மைந்தர்கள் எனும் அமைப்பால் உரிமை கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .