2021 ஜனவரி 20, புதன்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து

Princiya Dixci   / 2016 ஜூலை 18 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவி, விடுதிகளிலிருந்த மாணவர்கள் வெளியேற்றப்பட்டதுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் காலவரையின்றி மூடப்பட்டது.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குழுவாக வீதியால் செல்பவர்களை மறித்து விசாரணை செய்யும் பொலிஸார், ஆள் அடையாளத்தையும், உரிய காரணங்களையும் நிரூபிக்கத் தவறுபவர்களை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை செய்து உறுதிப்படுத்திய பின்னர் விடுவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .