George / 2015 நவம்பர் 19 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுத்து, வற்புறுத்தியதின் அடிப்படையில் பதவி விலகியுள்ளதாக அவர் கூறினார்.
வடமாகாண சபை உறுப்பினராகவிருந்த அங்கஜன் இராமநாதன், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதையடுத்து, அவரது இடத்துக்குப் பதிலாக அகிலதாஸ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அங்கஜன் இராமநாதன், தனது அலுவலகத்துக்கு தன்னை அழைத்து, கொலை மிரட்டல் விடுத்து பதவி விலகச் சொன்னதாகக் கூறி, அகிலதாஸ் நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
44 minute ago
15 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
15 Jan 2026