Princiya Dixci / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சொர்ணகுமார் சொரூபன்
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு வடமாகாண சபையின் ஏற்பாட்டிலான சுற்றுலாத்துறையின் மாகாண கருத்தரங்கு, யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியில் நேற்று திங்கட்கிழமை (28) நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், சுற்றுலாச் சபை அதிகாரிகள், வடமாகாண சுற்றுலாத்துறை தொடர்பான அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுற்றுலாத்துறை சார்ந்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வடமாகாணத்தின்; சுற்றுலாத்துறையை மேம்படுத்தி, சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தலுடன், வடமாகாண வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் இங்கு ஆராயப்பட்டன.
வடமாகாண சபையால் பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சுற்றுலாத்துறையை மையப்படுத்திய ஓவிய மற்றம் புகைப்படப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும் இக்கருத்தரங்கின் போது வழங்கி வைக்கப்பட்டன.
.jpg)
.jpg)
4 minute ago
7 minute ago
11 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
7 minute ago
11 minute ago