2021 மே 10, திங்கட்கிழமை

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்

George   / 2016 ஜூலை 23 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பு கவனயீர்ப்பு போராட்டத்தில் சனிக்கிழமை (23) ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு வருடங்களாக பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தும் தமது பிரச்சினையினை கவனத்தில் கொள்ளாது அரசு செயற்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள பட்டதாரிகள், தாம் நீண்டகாலமாக வேலையின்றி பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்தனர்.

நாடு பூராகவும் வேலையற்ற பட்டதாரிகள் உள்ள நிலையில் தற்போது க.பொ.தா சாதாரண தர தகமையுடன் உள்ள தொண்டர் ஆசிரியர்களை உள்வாங்குவதற்கான அரசின் முன்நகர்வுக்கும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

இப்போராட்டத்தில் வடக்கு மாகாணத்தின் அனைத்து பிரதேசத்திலும் உள்ள பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X