2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

விதிமுறைகளை மீறிய மூவர் முல்லைத்தீவில் கைது

Editorial   / 2019 நவம்பர் 16 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்துக்குள் புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாக்களிப்பு நிலையத்துக்குள் சென்று, வாக்களிப்பு,  வாக்குப் பெட்டி, அதிகாரிகளை படம் எடுத்து, இணையத்தளத்தில் வெளியிட்டமை தொடர்பில் முள்ளிவாய்க்காலைச் சேர்ந்த மேற்படி ஊடகவியலாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வாக்களிப்பு நிலையத்தின் முதன்மை தலைமைதாங்கும் அதிகாரி, உடனடியாக தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், புதுக்குடியிருப்புப் பகுதியில் கட்சி ஒன்றின் பிரதேச இணைப்பாளர், வாக்காளர்கள் வரிசையில் நின்ற மக்களை படம் எடுத்ததற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை முல்லைத்தீவு பகுதியில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். போலி வாக்குப் போடுவதற்கு முற்பட்ட வேளை, முல்லைத்தீவு பொலிஸாரால் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .