2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

‘விதை நெல்லை கூடுதலாகக் கொள்வனவு செய்ய நடவடிக்கை’

Editorial   / 2020 மார்ச் 02 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்ட விதை உற்பத்திக் கூட்டுறவுச் சங்கத்தால், இந்த ஆண்டுக்கான பெரும்போக நெற்செய்கைக்கான விதை நெல்லைக் கூடுதலாகக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டை விட இம்முறை சுமார் 7,000 புசல் வரையான விதை நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

இதற்கமைய, பதிவு செய்யப்பட்ட 119 வரையான விவசாயிகளிடமிருந்து இந்த விதை நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக, மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்தது.

கடந்த போகத்தின் போது, விதை நெல்லுக்கு பற்றாக்குறை ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டே, இம்முறை கூடுதலான விதை நெல்லைப் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிமிடருந்து கொள்வனவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X