2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்து: ஆசிரியருக்கு மறியல்

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

 

யாழ்ப்பாணம் – பூநாறி, மரத்தடியில் இடம்பெற்ற விபத்துடன் தொடர்புடைய ஆசிரியரை நவம்பர் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.பீற்றர் போல், நேற்று (20) உத்தரவிட்டார்.

பாடசாலைக்கு சைக்கிளில் சென்ற மாணவி ஒருவர், மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவி, மோட்டார் சைக்கிளைச் செலுத்த வந்த குறித்த ஆசிரியரால் ஓட்டோவொன்றில் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

 இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த ஆசிரியரை, நேற்று கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது,“இவ்விபத்தில் மாணவி ஒருவர் விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அவரைச் சகோதரி எனக் குறிப்பிட்ட ஒருவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், நீங்கள் ஆசிரியராக உள்ள போதும், பொலிஸாருக்கு அறிவித்து உரிய விசாரணையை நடத்தாமல், பொற்றுப்பற்ற வகையில் அங்கிருந்து சென்றுள்ளீர்கள்” என்று நீதவான் ஏ.பீற்றர் போல் கண்டித்து, அவரை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .