2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வயாவிளான் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது?

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்

வயாவிளான் மத்திய கல்லூரியின் முன்பக்க மதில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதாகத் தெரிவித்த அப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள், இதனால், தாங்கள் விபத்தை எதிர்கொள்ளும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

நீண்டகாலமாக, குறித்த பாடசாலை இராணுவத்தினரின் பாவனையில் இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த பாடசாலையின் மதில் சுவர் இடிந்து விழும் நிலையில், அடுத்த வருடம் பவள விழாவைக் கொண்டாட பாடசாலை சமூகம் ஆயுத்தமாகி வருகின்றது.

குறித்த பாடசாலையானது, பலாலி இராணுவத் தலைமையத்துக்கு அருகில் அமைந்துள்ளதுள்ளது. யுத்த காலத்தின் போது, இராணுவ செல், பீரங்கி தாக்குதலின் அதிர்வால் பாடசாலையின் மதில் சுவர்கள் உட்பட கட்டடங்கள் வெடிப்புகளுக்குள்ளான நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .