2021 மார்ச் 06, சனிக்கிழமை

வயோதிப பெண் வெட்டிக்கொலை: ஒருவர் கைது

George   / 2016 மே 26 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த வயோதிபப் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதேபகுதியைச் சேர்ந்த, 32 வயதான, ஒரு பிள்ளையின் தந்தையே சந்தேகத்தின்பேரில் வியாழக்கிழமை (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்ற வயோதிப் பெண், கடந்த 22 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கழுத்து வெட்டப்பட்டு உயிரிழந்திருந்தார்.

வயோதிப் பெண்ணும் அவரது கணவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில், சாப்பிட்டுவிட்டு கைகழுவச் சென்ற போது, பின்னால் வந்த இனந்தெரியாத நபர் வயோதிப் பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பிச்சென்றிருந்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இரத்தக்கறை படிந்த ஆடையொன்றை சந்தேகநபரின் வீட்டிலிருந்து மீட்டதுடன் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைதுசெய்துள்ளனர்.

வயோதிப பெண்ணின் குடும்பத்துடன் இருந்த முன்பகையே இந்த கொலைக்கு காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .