2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளை 31க்குள் நடத்தி முடிக்கவும்

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

தென்மராட்சிக் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளை, ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் நடத்தி முடிக்குமாறு, வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன், பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளார். 

 இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மாணவர்களின் கல்வி நிலையைக் கருத்திற்கொண்டே, 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு சகல பாடசாலைகளுக்கும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இக்காலப்பகுதிக்குள் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, தொடர்ந்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளளுமாறு அறிவுறுத்திய அவர், பெப்ரவரி மாதத்தில் வலயப் பாடசாலைகள் எவற்றுக்கும் விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படமாட்டாதெனவும் கூறினார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--