2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வலையில் சிக்கிய ‘தண்ணீர் சுறா’

Editorial   / 2019 நவம்பர் 22 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

சர்வதேச மீனர்வகள் தினமான நேற்று யாழ்ப்பாணம் தீவக மீனவர் ஒருவருக்கு, 2 ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட தண்ணீர் சுறா ஒன்று வலையில் மாட்டியுள்ளது.

நயினாதீவு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவருக்கே, இந்த சுறா மீன் பிடிபட்டுள்ளது.

குறித்த மீனவர் வழமை போன்ற தனது மீன்டிபியில் ஈடுபட்டிருந்த வேளை, வழமைக்கு மாறாக அதிக எடை கொண்ட மீன் ஒன்று மாட்டியிருப்பதை அவதானித்துள்ளார். இது தொடர்பில் சக மீனவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

ஏனைய சில மீனவர்கள் அங்கு வந்த போதும், வலையில் மாட்டிய மீனை படகில் ஏற்ற முடியாததால் அதை கரைக்கு இழுத்துச் செல்லும் நடவடிக்கையில் அவர்கள் அனைவரும் இணைந்து மேற்கொண்டனர்.

இந்த மீன் சுறா இனத்தை சேர்ந்த தண்ணீர் சுறா என்று அழைக்கப்படும் மீன் இனம் என்று தெரியவந்துள்ளது.

சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான எடை கொண்ட சுறா அது என்றும், அதை உணவுக்காக பயன்படுத்த முடியாது என்பதால் மீண்டும் அதை கடலிலேயே விட்டுவிட்டதாகவும், மீனவர்கள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .