2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

‘வேலை செய்யவிடாது தடுக்கின்றனர்’

Editorial   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண சுதேச சித்த மருத்துவத்துறைக்கான பணிக்கு, அரசாங்கத்தால் தனக்கு நியமனம் வழங்கப்பட்டபோதிலும் தன்னை வேலை செய்யவிடாது சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் தடுத்து வருவதாக, வைத்தியர் நன்னியர் நடராஜலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில், நேற்று (18) நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், வடக்கு மாகாண சுதேச சித்த மருத்துவத்துக்கு என்னுடைய பெயர் சிபாரிசு செய்யப்பட்டு அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டதாகவும் ஆனால் வடமாகாண சுதேச சித்த மருத்துவ ஆணையாளர் இதை மறைத்துவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதனால் அமைச்சு நியமனம் வழங்கியது எனக்குத் தெரியாமல் போனதெனத் தெரிவித்த அவர், பின்னர் அறிந்து கொண்டு அமைச்சரிடம் சென்ற போது நியமனம் வழங்குவதற்கான அறிவித்தல் விடுத்தும் தான் ஏன் வரவில்லை என்று கேட்டரெனவும் அதற்கு தன்னால் பதில் சொல்ல முடியாமல் போனதெனவும் கூறினார்.

பின்னர் நியமனக் கடிதத்தை அனுப்பி வைத்ததாகவும் அதில், பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து மருத்துவப் பணியை மேற்கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ​அவர் தெரிவித்தார்.

அதற்கேற்ப பணியாற்றும் நோக்கில் யாழ்., கைதடி சித்த மருத்துவ பீடத்துக்கு சென்ற போது தன்னை அவர்கள் எடுக்கவில்லை.யெனக் குற்றஞ்சாட்டினார்.

வடமாகாண சுதேச சித்த மருத்துவ ஆணையாளர் தன்னை இந்த சித்த மருத்துவத்தை செய்யவிடாது தடுப்பதன் நோக்கம் என்ன பல்தேசியக் கம்பனிகளின் அழுத்தங்களா அல்லது வேறு காரணங்களா என்பது தான் தெரியாமல் இருக்கிறதென, அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .