Editorial / 2026 மார்ச் 19 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, சமூகங்களுக்கிடையிலான நல்லுறவை வளர்க்கும் நோக்கில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் அதன் துணைத் தூதரகங்கள் இணைந்து பல்வேறு சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளன.
இதன் ஒரு அங்கமாக, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையில் 2026 பிப்ரவரி 24 அன்று கொழும்பு ITC ரத்னதீப விடுதியில் இப்தார் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இலங்கை நாடாளுமன்றத்தின் கௌரவ பிரதி சபாநாயகர் டாக்டர் ரிஸ்வி சாலிஹ் இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், அரசின் உயர்மட்ட அதிகாரிகள், நீதித்துறை உறுப்பினர்கள் மற்றும் வர்த்தகப் பிரமுகர்கள் எனப் பலதரப்பினரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வானது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சாரப் பிணைப்பை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.








2 minute ago
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
30 minute ago
1 hours ago