2021 மே 10, திங்கட்கிழமை

வல்லிபுர பக்தர்களிடம் திருடிய 7 பேருக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கர்ணன்

வல்லிபுரம் ஆழ்வார் ஆலய தேர்த் திருவிழாவுக்கு வருகை தந்த பக்தர்களின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில், பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 7 பேரையும் ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் திங்கட்கிழமை (28) உத்தரவிட்டார்.

தேர்த் திருவிழாவின் போது, நகை அறுப்பில் ஈடுபட்ட 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 60 பவுண் தங்கநகை மீட்கப்பட்டதுடன், அவர்கள் பயன்படுத்திய டொல்பின் ரக வாகனமும் மீட்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களின் மூவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், மற்றவர்கள் நீர்கொழும்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X