2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வாள் கொண்டு சென்ற பூசகருக்கு பொலிஸ் பிணை

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த் 

கோவில் தேவைக்காக வாள் கொண்டு சென்ற கோவில் பூசகரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் குப்பிளான் பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குப்பிளான் பகுதியில் உள்ள கோவிலில் பூஜையை முடித்துக்கொண்ட பூசகர், அங்கிருந்து, உரும்பிராய் பகுதியில் உள்ள கோவிலுக்கு பூஜைக்கு செல்லும் போது, அந்த கோவில் தேவைக்காக குப்பிளான் கோவிலில் இருந்து வாள் ஒன்றினை கொண்டு சென்றுள்ளார். 

அவ்வேளை, வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வாளுடன் சென்ற பூசகரை கைது செய்து, பொலிஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை செய்தனர்.

பின்னர் பொலிஸ் பிணையில் பூசகரை செல்ல அனுமதித்த பொலிஸார், பூசகர் கொண்டு சென்ற வாள் மற்றும் அவரது மோட்டார் சைக்கிள் என்பவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வாள் மற்றும் மோட்டார் சைக்கிளை நீதிமன்றில் சான்று பொருள்களாக ஒப்படைக்கவுள்ளதாகவும், வாள் கொண்டு சென்றமை தொடர்பில் நீதிமன்றில் வழக்கு தொடரவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .