Niroshini / 2016 மார்ச் 28 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது எனவும் ஊர்காவற்றுறை நீதவான் எ.எம்.எம்.றியால் தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை (28) நீதவான் றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கதைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குறித்த சந்தேகநபர்கள் சார்பாக மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி கோரினார்.
இதன்போதே, ஊர்காவற்றுறை நீதவான் ஏம்.எம்.எம்.றியால் இவ்வாறு தெரிவித்தார்.
டி.என்.ஏ அறிக்கை மற்றும் சான்று பொருட்களின் பகுப்பாய்வு அறிக்கைள் என்பன குற்றப்புலனாய்வு பொலிஸாரால் இன்றும்; நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவ் வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago