2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப்போராட்டம்

Niroshini   / 2016 மார்ச் 07 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

சிறைகளிலுள்ள அரசியல் கைதிகள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களின் விடுதலையை வலியுறுத்தியும் இன்று  திங்கட்கிழமை (07), முனியப்பர் கோயிலுக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று, முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாடு செய்த இவ் உண்ணாவிரதப்போராட்டத்தில், வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வட மாகாண சபை உறுப்பினர்களான இமானுவல் ஆனோல்ட், ஆரியகுட்டி பரஞ்சோதி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், மன்னார் பிரஜைகள் குழுவின் அங்கத்தவர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .