2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்துக்குள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஜூலை 13 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கிணற்றில் குதித்து விளையாடும் போது, கால்கள் முறிந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (12) உயிரிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி வரும், புத்தூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மணியம் கேதீஸ்வரநாதன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 06ஆம் திகதி வன்னிக்கு சுற்றுலா சென்ற போது, மேற்படி உத்தியோகத்தர் தண்ணீர் ஊற்றுக் கிணற்றில் குதித்து விளையாடியுள்ளார். இதன்போது, கால்கள் அடிபட்ட நிலையில் இவரின் முள்ளந்தண்டும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இறப்பு விசாரணைகளை நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .