Gavitha / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
செல்வநாயகம் கபிலன்
மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்று, விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளதாக, மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சுதுமலை தெற்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விமலேஸ்வரன் சுரேஸ் (வயது 19) என்ற இளைஞனே, இவ்வாறு சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளார்.
குறித்த இளைஞன். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். மது அருந்திய நால்வரும் 2 மோட்டார் சைக்கிளில் சென்ற போது, பின்னால் வந்த மோட்டார் சைக்களில், முன்னால் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இதன்போது, தூக்கி வீசப்பட்ட இளைஞன், மின்கம்பத்துடன் மோதி படுகாயங்களுக்கு உள்ளானார்.
இதன்பின்னர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago