Niroshini / 2016 மார்ச் 27 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்
மாங்குளத்தில் இருந்து புத்தூர் பகுதிக்கு மணல் ஏற்றி வந்த லொறி ஒன்று, புத்தூர் மீசாலை வீதி அன்னம்மார் கோயில் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வயலுக்குள் குடைசாய்ந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ் விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளரான புத்தூர், மேற்கு சிவன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஆயிலியம் மதனரூபன் (வயது 28), இரங்கநாதன் சதீஸ்குமார் (வயது30) ஆகிய இருவரும் படுகாயங்களுக்குள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் லொறி முற்றாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago