2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

12 தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2014 ஏப்ரல் 10 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் வறுமையற்ற இலங்கையினை உருவாக்க வேண்டுமென்ற வாழ்வின் எழுச்சித் திட்டத்தின் கீழ் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டிற்குட்பட்ட 12 குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் தையல் இயந்திரங்கள் வியாழக்கிழமை (10) வழங்கப்பட்டன.

பருத்தித்துறை மருதடி முருகன் ஆலய முன்றலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலா 22,000 ரூபா பெறுமதியான மேற்படி தையல் இயந்திரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்ரின் அலன்ரின் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் பருத்தித்துறைப் பிரதேச செயலர் இ.த.ஜெயசீலன், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X