2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

வடமாகாணத்தில் 120 பாடசாலைகள் தெரிவுக்கான முதற்கட்ட நிகழ்வு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

மஹிந்த சிந்தனையின் கீழ் 1000 பாடசாலைகள் செயற்றிட்டத்தில் வடமாகாணத்தில் 120 பாடசாலைகள் தெரிவுக்கான முதற்கட்ட நிகழ்வு  யாழ். நூலகத்திலுள்ள வடமாகாண ஆளுநர் மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்வி அமைச்சின் உயரதிகாரிகளினால் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்படவுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வடமாகாணத்திலிருந்து முதற்கட்டமாக 40 பாடசாலைகளுக்கிடையிலான தெரிவு நடைபெற்றதாக மாகாணக் கல்வித்திணைக்கள திட்டமிடல் பணிப்பாளர் கே.ஜெ.பிரற்லி தெரிவித்துள்ளார்

இந்த பாடசாலைத் தெரிவுகளை தேசிய ஆசிரியர் கல்விப் பணிப்பாளர் முரளிதரன், வடமாகாண கல்வி அபிவிருத்திப் பணிப்பாளர் ராபிக் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X