2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

வடக்கில் 1,202 தனியார் வீடுகள், காணிகளில் படையினர்: அரசாங்கம்

Super User   / 2011 பெப்ரவரி 23 , பி.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

வட மாகாணத்தில் தனியாருக்கு சொந்தமான 1,202 வீடுகள், காணிகள் மற்றும் நிறுவனங்களில் பாதுகாப்பு படையினர் தங்கியிருப்பதாக அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அரசாங்க பிரதம கொறடா தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தனியாருக்கு சொந்தமான 1,129 வீடுகள், காணிகள் மற்றும் நிறுவனங்களை இராணுவத்தினர் பயன்படுத்துவதாகவும் 35 தனியார் காணிகளை கடற் படையினர் பயன்படுத்துவதாகவும் இரண்டு அரிசி ஆலைகள் மற்றும் பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள 32 வீடுகளையும் காணிகளையும் விமான படையினர் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

தனியாருக்கு சொந்தமான 472 வீடுகள், காணிகள் மற்றும் நிறுவனங்கள் உரிய உரிமையாளர்களிடம் இராணுவம் கையளித்துள்ளதுடன் படையினரால் பயன்படுத்தப்படும் சில இடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

சில சொத்துக்கள் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் இருப்பதனால் இதுவரை உரிமையாளர்களுக்கு கையளிப்பது தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீhமானிக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .