2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

மல்லாகத்தில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 125பேர் கைது

Menaka Mookandi   / 2010 நவம்பர் 03 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

மல்லாகம் மாவட்ட நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 125 பேரை கொழும்பில் இருந்து வந்த மின்சாரசபை அதிகாரிகள் பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களிடம் தண்டப் பணத்தை அறவிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றுவருபவர்களை அதிகாலை முதல் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கண்டுபிடித்த கொழும்பு மின்சாரசபை அதிகாரிகளின் குழுவினர் செவ்வாய்க்கிழமை மல்லாக நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இவர்களை விசாரணை செய்த மல்லாகம் நீதவான் கஜநிதிபாலன் குற்றத்திற்கேற்ப 2,000 ரூபா முதல் 50,000 ரூபா வரை தண்டப்பணத்தை அறவிடுவதற்கு உத்தரவிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--