2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

வலி. வடக்கில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய 134 பேர்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கிரிசன்)

யாழ். வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில்  சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாகத் தெரிவிக்கப்படும் 134 பேர்  கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குப்படுத்தப்பட்டதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 14 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வலி. வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியிலுள்ளவர்கள் தவிர்ந்த  ஏனையோர்களின் நடமாட்டம் காணப்படுவதாகவும் அப்பகுதியிலுள்ள வீடுகளில் அத்துமீறிச் செல்லுதல்,  பொருட்களை திருடிச் செல்லுதல் போன்ற சம்பவங்கள் இடம்பெறுவதாகவும்  தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் பொலிஸார் கூறினர்.

கிராம அலுவலர்களும் பொதுமக்களும் வழங்கிய தகவல்களையடுத்து, பொலிஸார் வலி. வடக்குப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியவர்கள்  கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் சிலர் விசாரணைக்குட்படுத்தப்பட்ட நிலையில் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தெல்லிப்பளை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X