2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை மீனவர்கள் 14 பேர் விடுதலை

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

இந்தியா தமிழக கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 14 மீனவர்கள் அவர்களின் 3 பலநாட்கலங்களுடன் புதன்கிழமை (26) விடுதலை செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ்.நீரியல் வளத்துறை திணைக்களத்தின் கடற்றொழில் பரிசோதகர் ரமேஸ் கண்ணா வியாழக்கிழமை (27) தெரிவித்தார்.

குறித்த மீனவர்கள், தழிழக கரையோர காவல் படையினரால் கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி இலங்கை- இந்திய கடல் எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இரு நாட்டு அரசும் மீனவர்களை விடுதலை செய்வதாக கூறிய அடிப்படையில், 14 இலங்கை மீனவர்கள் புதன்கிழமை(26) 3 மணியளவில் காங்கேசன்துறை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

தொடர்ந்து காங்சேன்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த மீனவர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதையடுத்து, யாழ்.நீரியல் வளத்துறையினரிடம் குறித்த மீனவர்களை ஒப்படைத்தனர்.

திருகோணமலையைச் சேர்ந்த 9 மீனவர்கள் மற்றும் மாத்தறையை சேர்ந்த 5 மீனவர்களுடன்; 3 பலநாட்கலங்கள் இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .