2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

15 வயது சிறுவனுக்கு 14 நாள் விளக்கமறியல்

Super User   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுமித்தி)

யாழ். பாசையூர் பகுதியில் 23 வயது இளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்த 15 வயதுடைய சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி க.சிவகுமார் முன்னிலையில் குறித்த சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இதன்போதே இந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுவனை யாழ். பொலிஸார் கைது செய்து யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, குறித்த சிறுவனை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி:

கத்திக் குத்தில் இளைஞர் பலி; 15 வயது சிறுவன் கைது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .