2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

15 வருடங்களின் பின் அரியாலை, பூம்புகார் மக்கள் மீள்குடியேற்றம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டின் நல்லூர் பிரதேச செயலர் பிரிவு மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அரியாலை, பூம்புகார் உள்ளிட்ட பிரதேச மக்கள் இன்று வியாழக்கிழமை மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஜே ௯1 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கிழக்கு அரியாலை பூம்புகார் மக்களும் யாழ்ப்பாண பிரதேச செயலர் பிரிவிலுள்ள ஜே ௬1 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட துண்டி, புனிதபுரம், உதயபுரம், மகேந்திரபுரம், எழிலூர் மற்றும் பாஷையூர் கிராமத்தின் ஒருபகுதி மக்களும் இன்று காலை மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ்ப்பாண மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் பிரதேச செயலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டு சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின்போது தமது சொந்த இடங்களைவிட்டு இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள், கடந்த 15 வருடங்களின் பின்னர் இன்றையதினம்  மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .