2021 மார்ச் 06, சனிக்கிழமை

ஊழியர் சேமலாப நிதியத்தில் 164 நிறுவனங்கள் பதிவுசெய்துள்ளன

Kogilavani   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                        (சுமித்தி)
யாழ். மாவட்டத்தில் 164 தனியார் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதிக்கு பதிவு செய்துள்ளதாக யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் நீலலோஜினி கேதீஸ்வரன் இன்று தமிழ் மிரருக்கு தெரிவித்தார்.

இதனடிப்படையில், மார்ச் மாதம் 41, ஏப்ரல் 17, மே 21, யூன் 13, யூலை 17, ஓகஸ்ட் 29, செப்டெம்பர் 22 என்ற அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதி திட்டத்தில் பதிவு செய்துள்ளன.

ஊழியர் சேமலாப நிதி திட்டத்தில் பதிவு செய்தவர்களில் 347 ஆண்களும்; 198 பெண்களும் உள்ளடங்குவதாக யாழ். மாவட்ட உதவித் தொழில் ஆணையாளர் மேலும் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .