Kogilavani / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
ஏழாலை மகா வித்தியாலயத்தில் இருந்து இரண்டாண்டுகளுக்கு முன்னர் தேசிய அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகள் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லையென பெற்றோர்களும் மாணவாகளும் விசனம் தெரிவிக்கின்றனர்.
தாம் குறிப்பிட்ட மாணவர்களின் தேசிய அடையாள அட்டை தொடர்பாக பாடசாலையுடன் கதைத்துவிட்டு யாழ். செயலக அடையாள அட்டைப் பிரிவில் தேடிய போதிலும் குறிப்பிட்ட அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெறவில்லையென தெரிவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உண்மையைக் கூறி, மாணவர்களின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்க்கொள்ள முன் வர வேண்டும் என பெற்றோர்கள் எதிர் பார்க்கின்றார்கள்.
யாழ்.மாவட்டத்தில் தேசிய அடையாள அட்டை இன்மையால் க.பொ.த சாதாரண பெறுபேறு கிடைக்கப்பெறாத மாணவாகளில் இந்த மாணவாகளும் காணப்படுகின்றாhகள்.
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
7 hours ago