2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் 20 இந்திய வியாபாரிகள் கைது?

Super User   / 2010 ஒக்டோபர் 27 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 20 இந்திய வியாபாரிகள் இன்று காலை  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சில விடுதிகளில் தங்கியிருந்த மேற்படி வியாபாரிகள், உரிய ஆவணங்களின்றி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, கொழும்பிலிருந்து வந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக விடுதி வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ். பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரி சமன் சிகேராவிடம் தமிழ் மிரர் இணையத்தளம் இது தொடர்பாக கேட்டபோது, இத்தகைய கைது குறித்து தமக்கு தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .