2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வதிரியில் புதிய தொழிற்சாலை அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தோற்பொருள் உற்பத்திக்கு புகழ்பெற்ற வடமராட்சி வதிரியில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை காரணமாக நவீன வசதிகளுடன் கூடிய காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி நிலையமொன்று நேற்று (15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
 
மஹிந்த சிந்தனையின் கீழ் கிராமிய கைத்தொழில்கள் மற்றும் உற்பத்திக் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கை காரணமாக இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் மேற்படி காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி சார்ந்த மத்திய நிலையம் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சின் கீழ் இயங்கும் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் முற்றுமுழுதான நிதியுதவியுடன் சுமார் ஒரு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட மேற்படி தோற்பொருள் உற்பத்தி நிலையத்தினூடாக பாதணிகள் உள்ளிட்ட ஏனைய தோற்பொருள் உற்பத்திகளை மேற்கொள்ளமுடியும் என்பதுடன் பலருக்கு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

குறிப்பாக புதிதாக பொருத்தப்பட்டுள்ள இயந்திர சாதனங்கள் மூலம் தரச்சிறப்பு வாய்ந்த தோற்பொருள் உற்பத்திகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மற்றுமோர் விடயமாகும்.

அத்துடன் வதிரி கிராம இளைஞர் யுவதிகளுக்கு மேற்படி துறையில் பயிற்சி வழங்குவதற்கென குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சியாளர் ஒருவரும்  கைத்தொழில் அபிவிருத்திசபையினால் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
இன்று மாலை வதிரி காலணி மற்றும் தோற்பொருள் உற்பத்தி கிராமத்தின் பொதுவசதிகள் மத்திய நிலையத்தில் கரவெட்டி பிரதேச செயலர் சத்தியசீலன் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாகப் பங்குகொண்ட இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேலதிகச் செயலாளர் அமரதுங்க, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் பொதுமுகாமையாளர் திருமதி.ஜஸ்மின் மன்னப்பெருமா, தோற்பொருள் உற்பத்திப் பணிப்பாளர் கருணாதாச, வதிரி தோற்பொருள் உற்பத்தி நிலையத் தலைவர் லக்ஷ்மிகாந்தன, அமைச்சு அதிகாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
இங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தோற்பொருள் உற்பத்தியில் பாரம்பரிய பெருமைமிக்க வதிரி கிராமம் கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக அதன் செயற்பாட்டில் பின்னடைவைக் கண்டாலும் மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்து தேசிய ரீதியில் தரமான தோற்பொருட்களை வழங்க வேண்டும் என்பதே தமது விருப்பம் எனக்குறிப்பிட்டார்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--