2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய தேர்த் திருவிழா இன்று

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

வரலாற்றுப் புகழ்மிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஸ்நாபன அபிஷேகம், விசேட பூசைகள்,  ஸ்தம்பப் பூசை மற்றும் வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று சுவாமி காலை 9.00 மணிக்கு தேருக்கு வந்தது.

தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய தேர்த் திருவிழாவுக்குச் செல்லும் பக்தர்களின் நன்மை கருதி,  விசேட பஸ் சேவைகளை இலங்கை போக்குவரத்துச்சபையும் மற்றும் தனியார் சிற்றூர்தி சேவைச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

தெல்லிப்பளை பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாளை திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.  


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--