2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

நாளை தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழா

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 07:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

வரலாற்றுப் புகழ்மிக்க தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா நாளை திங்கட்கிழமை  காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது

நாளை அதிகாலை முதல் விசேட பூசைகள் மற்றும் அபிஷேகங்கள் இடம்பெறவிருப்பதுடன்,  இதனைத் தொடர்ந்து முருகன் தேரில் வலம் வரவுள்ளார்.

பக்தர்களின் நன்மை கருதி, விசேட பஸ் சேவைகளை யாழ். மாவட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபையினர்  வழங்கவுள்ளனர். அத்துடன், தனியார் சிற்றூர்திச் சேவையினரும்  விசேட சேவைகளை குடாநாட்டின் நாலா பகுதிகளில் இருந்தும் நடத்தவுள்ளனர்.

இதேவேளை, நீண்டகாலத்தின் பின்னர் இம்முறை ஆலய சுற்றாடலில் பக்தர்கள் கூடுவார்கள் என்பதுடன்,  காவடிகள் மற்றும் பால்குடம் எடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக காணப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும் மற்றும் யாழ். குடாநாடு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் உட்பட தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் தேர்த் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆலய சுற்றாடலில் பொலிஸாருடன் இணைந்து இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடவிருப்பதுடன், ஆலயத் தொண்டர்கள், சாரணர்கள், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களும் கடமையில் ஈடபடவுள்ளனர்.
      
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .