Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டில் பொருள்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பில் பலரிடையே நிலவுகின்ற தெளிவின்மையை அகற்றி நுகர்வோரிடையேயும், வர்த்தகரிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை அமைச்சரது அலுவலகத்தில் விஷேட கலந்துரையாடலலில், யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். குடாநாட்டு வர்த்தக சங்கப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டு வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்படுவதனால் இவ்விடயம் தொடர்பில் குடாநாட்டு வர்த்தக சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, வர்த்தக மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்பு கொண்ட அமைச்சர் நுகர்வோர் பாதுகாப்புச்சபை அதிகாரிகள், வர்த்தகர்கள், காவல்துறை அதிகாரிகள், அரச அதிபர், மேலதிக அரச அதிபர் ஆகியோரைக் கொண்டு, பொருள்களின் விலைக் கட்டுப்பாடு தொடர்பிலான தெளிவினை நுகர்வோருக்கும், வர்த்தகர்களுக்கும், ஏனைய துறையினருக்கும் ஏற்படுத்தும் முகமாக நாளை திங்கட்கிழமை உயர்மட்ட கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளனர்.
அத்துடன், மரக்காலைகளுக்கான அனுமதிப் பத்திரங்கள், மருந்தகங்களில் பணி புரிவதற்கு மருந்தாளர்களுக்கான பயிற்சிகளை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் நாளை விஷேட கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
41 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
7 hours ago