Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
யாழ். குடாநாட்டில் புலமைப்பரிசில் பரீட்சைக்கு பிள்ளையை கூட்டிச்சென்ற ஆசிரியரின் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் உட்பட பல பொருள்களை திருடிச்சென்றுள்ளனர்.
யாழ். மல்லாகம் சோடாக்கம்பனி கிழக்கு ஒழுங்கையிலுள்ள ஆசிரியரின் வீட்டிலேயே நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாததைக் கண்ட திருடர்கள், வீட்டின் முன்புறக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று வீட்டை முழுமையாக சோதனையிட்டதுடன், சுமார் ஆறு பவுன் நிறையுடைய சங்கிலிகள், பணம் உட்பட ஏனைய பொருள்களையும் திருடிச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
6 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
9 hours ago