2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த 'துரிதசேவைப் பொலிஸ் கார்’

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரண்யா)

யாழ்ப்பாணத்தில் பெருகிவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தும் முகமாக சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து செல்லக்கூடிய வகையில் 'அவசர பொலிஸ் கார் சேவை' குடாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பாரதூரமான குற்றச்செயல்கள் இடம்பெறும் பட்சத்தில் பொதுமக்கள் 021 321 0827 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு குற்றச்செயல்  குறித்து அறிவிக்க முடியும் என்பதுடன், இந்த 'துரிதசேவைப் பொலிஸ் காரில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று  அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

இந்த நடவடிக்கை மூலம் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பாரதூரமான குற்றச்செயல்கள்  குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--