Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சரண்யா)
யாழ்ப்பாணத்தில் தனது புதிய கிளையொன்றை பிரிட்டிஷ் கவுன்ஸிலின் 2011 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அமைக்கவுள்ளதாக பிரிட்டிஷ் கவுன்ஸிலின் இலங்கைக்கான பணிப்பாளர் கில் வெஸ்வே தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் கிளையொன்றை அமைப்பது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடியுள்ளோம். இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளது.
சுமார் 30 வருடங்களாக நீடித்த போர் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித்த நிலையிலேயே யாழ்ப்பாணம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாகவே அங்கு எமது கிளை ஒன்றை அமைப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம்.
இதன் மூலம் பல்வேறுபட்ட நோக்கங்களுக்காக லண்டன் பரீட்சைகளில் தோற்றும் யாழ்ப்பாண மாணவர்களும் பயனடைவர் என்று அவர் மேலும் கூறினார்.
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025